கொரோனா, ஊரடங்கால் மக்கள் தவிக்கும் இந்த சூழலில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாமே ! நடிகர் அஜித்

 

கொரோனா, ஊரடங்கால் மக்கள் தவிக்கும் இந்த சூழலில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாமே ! நடிகர் அஜித்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் அன்பாக தல என்று அழைக்கப்படும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவரின் சின்ன நகர்வைக்கூட இணையத்தில் வைரலாகி வருகின்றனர். இவரின் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பாத்து காத்திருக்கும் நாள் அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்று. தல அஜித் இந்தாண்டு தனது 49வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கிறார். அவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவரது ரசிகர்கள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டனர். ட்விட்டரில் ஹேஷ்டாகுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ajith

எப்பவுமே ஆரவாரமில்லாமல் தனது குடும்பாத்தாருடன் பிறந்த நாள் கொண்டாடுவர் அஜித். ஆனால் அவரது ரசிகர்கள் மே.1 ஆம் தேதியை திருவிழா போல கொண்டாடுவர்.  மே 1 ஆம் தேதி என்றால் அஜித் படம் ஸ்பெஷல் காட்சிகளாக ரிலீஸாகும். பேனர்கள், போஸ்டர்கள், நலத்திட்ட உதவி என தல ரசிகர்கள் பட்டையக் கிளப்பிவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா மற்றும் ஊரடங்கால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். வீட்டிலிருந்து எவ்வாறு அவரது பிறந்த நாளை கொண்டாட முடியும் என யோசித்து, அஜித்தின் பிறந்த நாளுக்காக காமன் டிபி ஒன்றை உருவாக்கியுள்ளனர். பொது டிபி-யை அருண் விஜய், ஹன்சிகா, ப்ரியா ஆனந்த், பிரேம்ஜி, பிக் பாஸ் ரைசா, யாஷிகா ஆனந்த், ஆதவ் கண்ணதாசன், ஹார்த்தி, சாந்தனு உள்ளிட்ட 14 பிரபலங்கள் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளனர்.

ajith tweet

இந்நிலையில் டிபியை வெளியிடும் பிரபலங்களில் ஒருவரான  ஆதவ் கண்ணதாசன் ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “அன்புள்ள தல ரசிகர்களே. அஜித்  சாரின் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. அவரது பிறந்த நாளுக்கு எந்த பொது முகப்புப் படங்களையும் சமூக வலைதளங்களில் வைக்கவேண்டாம் என்றும், கொரோனா காலத்தின்போது எந்தக் கொண்டாட்டத்திலும் ஈடுபட வேண்டாம் என்றும், இதனை அஜித்  தனிப்பட்ட முறையில் விரும்புவதாக வேண்டுகோள் வைத்தார்கள். ஒரு ரசிகனாக, சக நடிகனாக, மனிதனாக அவரது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்க விரும்புகிறேன். இந்தக் கடினமான சூழலில் அனைவருக்கும் நலமான வாழ்வு கிடைக்கப் பிரார்த்தனை செய்வோம். அஜித் கனிவுடன் நம்மிடம் வேண்டுகோள் விடுக்கிறார். எனவே அவரது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுப்போம். உங்கள் அனைவருக்கும் நன்றி”.என்று ஆதவ் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.