கொரோனா அறிகுறி இருப்பவர்கள் செல்ஃபி எடுத்து அனுப்பினால் உடனடி சிகிச்சை!

 

கொரோனா அறிகுறி இருப்பவர்கள் செல்ஃபி எடுத்து அனுப்பினால் உடனடி சிகிச்சை!

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலமாக அதிகமாக கொரோனா பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதிவேகமாக பரவி வருகிறது. வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலமாக அதிகமாக கொரோனா பரவி வருகிறது. அதனால், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். தங்களுக்கு கொரோனா இருப்பது தெரியாமல், சிலர் தன்னை தனிமைபடுத்திக் கொள்ளாமல் வெளியே சுற்றித் திரிவதால் மாற்றவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

ttn

இந்நிலையில் கொரோனாவால் தனிமை படுத்தப்பட்டவர்களையும், சிகிச்சை பெற்று வருபவர்களையும் கண்காணிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா அறிகுறி இருப்பவர்கள் ஒரு செல்ஃபி எடுத்து அனுப்பினால் உடனிடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.