கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  236 ஆக உயர்ந்துள்ளது.  கர்நாடகா,டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில்  ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.  இதுவரை 209 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ttn

இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மார்ச் 27-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கவிருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் ஏற்படத் தொடங்கியிருப்பதால் ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பிறகு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என தற்போது தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.