கொரோனா அச்சம்! டிஸ்னி லாண்ட் மூடப்பட்டது.

 

கொரோனா அச்சம்! டிஸ்னி லாண்ட் மூடப்பட்டது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் முதல் டிஸ்னிலேண்ட் தொடங்கப்பட்டது. இப்போது அதைத் தொடர்ந்து ஃபுளோரிடா,பாரிஸ்,டோக்கியோ, ஹாங்காங்,ஷாங்காய் என ஆறு டிஸ்னி பார்க்குகள் திறக்கப்பட்டன. நாளெல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் சிரித்து மகிழ்வதற்காகவே இங்கு வருகிறார்கள். 

உலகிலேயே மகிழ்ச்சிகரமான இடம் டிஸ்னிலேண்ட் என்பார்கள். இன்று உலகெங்கும் உள்ள தீம் பார்க்குகளின் ஆரம்பம் அதுதான். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் முதல் டிஸ்னிலேண்ட் தொடங்கப்பட்டது. இப்போது அதைத் தொடர்ந்து ஃபுளோரிடா,பாரிஸ்,டோக்கியோ, ஹாங்காங்,ஷாங்காய் என ஆறு டிஸ்னி பார்க்குகள் திறக்கப்பட்டன. நாளெல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் சிரித்து மகிழ்வதற்காகவே இங்கு வருகிறார்கள். 

disneyland-8

இப்போது கொரோனா வைரஸ் தாக்குதலால் அவை ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. ஹாங்காங், ஷங்காய் இரண்டும் ஜனவரியிலேயே மூடப்பட்டு விட்டன. கடந்த மாதம் டோக்கியோ பார்க்கும் மூடப்பட்டது. இப்போது அமெரிக்காவின் கலிஃபோர்னியா கவர்னர் கவின் நியூமென் பொது இடத்தில் 250 பேருக்கு மேல் கூடுவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டதால், உலகின் முதல் தீம்பார்க்கான டிஸ்னிலேண்ட் மூடப்பட்டது. 1955ம் ஆண்டு துவங்கப்பட்ட டிஸ்னிலேண்ட் வரலாற்றில் நான்காவது முறையாக மூடப்படுகிறது. 1963ம் ஆண்டு ஜான் எஃப் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட போது முதன் முறை மூடப்பட்டது. அதன் பிறகு 1994ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போதும், 2001ல் அமெரிக்காவில் பின்லேடன் நடத்திய தாக்குதலின்போதும் ஏற்கனவே மூடப்பட்டு இருக்கிறது. இப்போது கொரோனா வைரசுக்காக மூடப்படுவது நான்காவது முறையாகும்.