கொரோனாவை விரட்ட அகோரிகள் செய்த யாகம்!

 

கொரோனாவை விரட்ட அகோரிகள் செய்த யாகம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,738 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,738 ஆக உயர்ந்துள்ளது. 

tt

இதுவரை 483 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள நிலையில் 248 பேர்  பலியாகி உள்ளனர்.  தமிழகத்தை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. மேலும் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 27 பேர் குணமடைந்துள்ளனர். இதன் வீரியம் எப்போது குறையும் என தெரியாமல் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். 

tt

இந்நிலையில் கொரோனா முற்றிலும் அழிந்து உலக மக்கள் பாதுகாப்பாக இருக்க  திருச்சியில் அகோரிகள் தலைகீழாக நின்று சிறப்பு யாகம் நடத்தினர். 

tt

அரியமங்கலத்தில் உள்ள காளி கோயிலில் அகோரி மணிகண்டன் தலைமையில்  இந்த யாகம் நடத்தப்பட்டது. 

tt

அதில்  தீபம் ஏற்றி பின்பு வரமிளகாய், நவதானியங்கள் உள்ளிட்டவை கொண்டு யாகம் செய்யப்பட்டது. 

tt

அப்போது அகோரிகள் சங்கு ஊதியும், தலைகீழாக நின்றும்  காளியை வழிபாடு செய்தனர்.