கொரோனாவை விட்டுவிட்டு பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க! – ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர் நியமனம்

 

கொரோனாவை விட்டுவிட்டு பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க! – ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர் நியமனம்

நாடு முழுக்க கொரோனா அச்சம் காரணமாக மக்களின் வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனா பரவல் வேகமாகி வருகிறது. ஒன்றை, இரட்டை, மூன்று இலக்கத்தில் சென்று கொண்டிருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு தற்போது நான்கு இலக்கத்தைக் கெட்டியாகப் பிடித்துள்ளது

பீகார் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளரை பா.ஜ.க நியமித்துள்ளது.
நாடு முழுக்க கொரோனா அச்சம் காரணமாக மக்களின் வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனா பரவல் வேகமாகி வருகிறது. ஒன்றை, இரட்டை, மூன்று இலக்கத்தில் சென்று கொண்டிருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு தற்போது நான்கு இலக்கத்தைக் கெட்டியாகப் பிடித்துள்ளது. ஒரு நாளைக்கு நான்கு ஆயிரம் புதிய நோயாளிகள் என்ற புதிய உச்சத்தை இந்தியா எட்டியுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு நாளைக்கு 10 ஆயிரம் என்ற நிலையை அடையலாம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

corona-in-bihar-89

இந்த நிலையில் தேர்தல் பணியில் பா.ஜ.க தீவிரமாக குதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் சட்டமன்றத்தின் ஆயுள்காலம் வருகிற நவம்பர் 29ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. எனவே, இன்னும் சில மாதங்களில் தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. கொரோனா காரணமாக எல்லா கட்சிகளும் முடங்கிப்போயுள்ள நிலையில், பா.ஜ.க தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை பா.ஜ.க மேலிடம் நியமித்துள்ளது. 
ஒவ்வொரு பூத்திலும் ஏழு பேரைக் கண்டறிந்து அவர்கள் தலைமையில் பணிகள் மேற்கொள்ளவும், இதுதவிர, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் என மேலும் சமூக அளவில் ஆறு பிரதிநிதிகளை நியமித்து பணிகளைத் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

bihar-bjp-89

பூத் அளவில் பிரதிநிதிகள் நியமிக்கும் பணியை வருகிற 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாம். இதன் மூலம் பா.ஜ.க-வின் பிரசாரங்கள் ஒவ்வொரு நபரையும் சென்று சேர திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இத வழக்கமான பணிதான். ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் இது போன்று குழுக்கள் அமைக்கப்படுவது வாடிக்கையான ஒன்று. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 5 அல்லது 6 மண்டல் கமிட்டி அமைக்கப்படும், இதில் ஒவ்வொறு மண்டல கமிட்டியிலும் 60 பூத் கமிட்டி இருக்கும்” என்றார்.