கொரோனாவை பேரிடராக அறிவித்த உ.பி அரசு!

 

கொரோனாவை பேரிடராக அறிவித்த உ.பி அரசு!

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாநில பேரிடராக கொரோனாவை அம்மாநில ஆளுநர் அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இன்று நொய்டா மற்றும் ஷமாலியில் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் வெளிநாட்டுப் பயணம் எதுவும் மேற்கொள்ளாதவர். இதன் மூலம், சமூக தொற்றாக கொரோனா உருவெடுக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவை பேரிடராக அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் கொரோனாவை பேரிடராக அறிவித்த முதல் மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாறியுள்ளது. மிகப்பெரிய பாதிப்பு வருவதற்கு முன்பு, மற்ற மாநில அரசுகளும் மத்திய அரசும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்புமாக உள்ளது.