கொரோனாவை தடுக்க நகரங்களைத் துண்டிப்பதில் தவறு இல்லை! – ப.சிதம்பரம் எச்சரிக்கை

கொரோனாவை தடுக்க நகரங்களைத் துண்டிப்பதில் தவறு இல்லை! – ப.சிதம்பரம் எச்சரிக்கை

கொரோனா பாதிப்பு இந்தியாவில் இரண்டாம் கட்டத்தை எட்டிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அலட்சியம் காரணமாக மூன்றாவது எனப்படும் மிக ஆபத்தான நிலையை நோக்கி இந்தியா நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது. மக்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்ப்பதன் மூலம் கொரோனாவை தடுக்கலாம் என்று ஆலோசனை கூறப்பட்டு வரும் நிலையில், அரசு நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று கூறி வருகிறது.

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் 2-4 வாரங்களுக்கு நகரங்களின் தொடர்பை, இயக்கத்தை துண்டிப்பது கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க உதவும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

corona-89.jpg

கொரோனா பாதிப்பு இந்தியாவில் இரண்டாம் கட்டத்தை எட்டிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அலட்சியம் காரணமாக மூன்றாவது எனப்படும் மிக ஆபத்தான நிலையை நோக்கி இந்தியா நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது. மக்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்ப்பதன் மூலம் கொரோனாவை தடுக்கலாம் என்று ஆலோசனை கூறப்பட்டு வரும் நிலையில், அரசு நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று கூறி வருகிறது.

இந்த நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்வீட்களை வெளியிட்டுள்ளார். அதில், “உலக சுகாதார நிறுவன இயக்குநர் ஜெனரல் நேற்றை அறிவிப்புக்குப் பிறகு நம்முடைய அனைத்து சிறு மற்றும் பெரு நகரங்களின் செயல்பாட்டை இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு நிறுத்திவைப்பதில் எந்த தயக்கமும் தேவையில்லை. இத்தாலி, ஈரான், ஸ்பெயினில் என்ன நடந்தது என்பதை நாம் பார்த்த பிறகும் அரசு நகரங்களின் இயக்கத்தை நிறுத்த மறுப்பது ஏனோ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.