கொரோனாவுக்கு பயந்து பணிக்கு வராத ஊழியர்கள்.. மருத்துவமனை நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை!

 

கொரோனாவுக்கு பயந்து பணிக்கு வராத ஊழியர்கள்.. மருத்துவமனை நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை!

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறை உள்ளிட்ட அத்தியாவசிய பணி செய்வோர், வழக்கம் போல பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன் படி அவர்கள் அனைவரும், மக்களை காக்க தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகின்றனர்.

ttn

இருப்பினும் சிலர் கொரோனா அச்சத்தால் பணிக்கு வராமல் வீட்டிலேயே இருக்கின்றனர். அதே போல புதுச்சேரியில் உள்ள புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் பணி புரியும் ஊழியர்கள் 54 பேர் கொரோனா வைரசுக்கு பயந்து வீட்டிலேயே இருந்துள்ளனர். அவர்களை பணிக்கு வருமாறு மருத்துவமனை நிர்வாகம் பல முறை அறிவுறுத்தியும் அவர்கள் வராததால், அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணிக்கு வராத அந்த 54 ஊழியர்களையும் மருத்துவமனை நிர்வாகம் பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.