கொரோனாவுக்கு சிகிச்சை: 12 ஆம் வகுப்பு படித்த போலி மருத்துவர் கைது!

 

கொரோனாவுக்கு  சிகிச்சை: 12 ஆம் வகுப்பு படித்த போலி மருத்துவர் கைது!

மக்களை பயமுறுத்தி  400 முதல் 500 ரூபாய் வரை பணம் வசூலித்துக் கொண்டு பாராசிட்டமால் மாத்திரை கொடுத்து அனுப்புவதாகவும் புகார் எழுந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரில் சக்தி ஹெல்த் கேர் ஒன்றை நடத்தி வருபவர் மாதவன். இவர் சமீப காலமாக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா  தொற்றுக்கு சிகிச்சையளிப்பதாக விளம்பரம் செய்துள்ளார். சாதாரண சளி காய்ச்சல் என வரும் மக்களை பயமுறுத்தி  400 முதல் 500 ரூபாய் வரை பணம் வசூலித்துக் கொண்டு பாராசிட்டமால் மாத்திரை கொடுத்து அனுப்புவதாகவும் புகார் எழுந்தது.

tn

இதையடுத்து அனைத்து மருத்துவ மனைகளுக்கான தொடர்பு அதிகாரி ஐயப்பன் பிரகாஷுடன் ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு ஆய்வு நடத்தியதில் மாதவன் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளது, புத்தகங்களை படித்து பார்த்து மனப்பாடம் செய்துகொண்டு  மருந்துக்குறிப்பு எழுதி கொடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 

ttn

இந்நிலையில் போலி மருத்துவர் மாதவனை போலீசார் கைது செய்ததுடன் அவரின் சக்தி ஹெல்த் கேர் கிளினிக்கிற்கும் சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.