கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா உறுதியாக துணை நிற்கும்: பிரதமர் மோடி

 

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா உறுதியாக துணை நிற்கும்: பிரதமர் மோடி

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  16,05,548 ஆக உயர்ந்துள்ள நிலையில், 16,05,548 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  16,05,548 ஆக உயர்ந்துள்ள நிலையில், 16,05,548 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் பரவிய இந்த வைரஸ் 180க்கும் மேற்பட்ட உலக நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,412 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், ஹைட்ராக்சிகுளோரோகுயின் எனப்படும் மலேரியாவுக்கான மருந்து கொரோனா வைரஸை குணமாக்குவதாக நம்பப்படுகிறது.  

ttn

24 மூலப்பொருட்களை வைத்து தயா’ரிக்கப்படும் இந்த மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருந்தது. அதன் பின்னர் இந்த மருந்தை உலக நாடுகளுக்கு அளிக்க இந்தியா முன்வந்தது. இதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் மோடிக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார். அதே போல பிரேசில் பிரதமரும், இஸ்ரேல் பிரதமரும் மோடிக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, கொரோனாவை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும் என்றும் உலக நாடுகளுக்கு உதவ இந்தியா தயாராக இருக்கிறது என்றும் கொரோனாவில் இருந்து மனிதர்களை காக்கும் இந்த யுத்தத்தில் இந்தியா உறுதியாக துணை நிற்கும் என்று தெரிவித்திருக்கிறார்.