கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் திணறும் அமெரிக்கா : ஒரே நாளில் 18,000 பேர் பாதிப்பு!

 

கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் திணறும் அமெரிக்கா : ஒரே நாளில் 18,000 பேர் பாதிப்பு!

உலக நாடுகளிடையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது

. அங்கு 1500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில்,1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நியூயார்க் நகரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாக மாறியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதால் இரண்டு பேருக்கு ஒரு செயற்கை சுவாச கருவி பயன்படுத்தும் சூழல் நிலவுகிறது. 

ttn

தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணம் GM மற்றும் FORD நிறுவனங்கள் சுவாசக் கருவியை உற்பத்தி செய்யாதது தான் என அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.  தற்போது இருக்கும் சூழலுக்கு 40 ஆயிரம் சுவாச கருவிகள் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 18,000 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் வளர்ச்சி அடைந்த நாடான அமெரிக்காவே திணறி வருகிறது.