கொரோனாவின் கோரதாண்டவம் எதிரொலி……கடந்த 2 மாதங்களில் 4 பணியாளர்களில் ஒருவர் வேலை இழந்திருப்பார்….

 

கொரோனாவின் கோரதாண்டவம் எதிரொலி……கடந்த 2 மாதங்களில் 4 பணியாளர்களில் ஒருவர் வேலை இழந்திருப்பார்….

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களில் 4 பணியாளர்களில் ஒருவர் வேலை இழந்திருப்பார் என சி.எம்.ஐ.இ. தெரிவித்துள்ளது.

கொரோன வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு இம்மாதம் 17ம் தேதி வரை மொத்தம் 54 நாட்கள் லாக்டவுனை நடைமுறைப்படுத்தியுள்ளது. லாக்டவுனின் முதல் 40 நாட்களில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கும் கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டது. போக்குவரத்து முடக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டன. மேலும் மக்களும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அரசு தெரிவித்தது.

வேலையின்மை

தொழில் துறை நடவடிக்கைகள் கிட்டத்தட்ட சுத்தமாக நின்று போனதால் பலர் வேலையில்லாமல் வீட்டில் முடங்கி கிடந்தனர். இந்த நிலையில் சி.எம்.ஐ.இ. நிறுவனம் வேலைவாய்ப்பு தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வின்முடிவுகளின்படி, இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை விகிதம் 23.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் தமிழ்நாடு (49.8 சதவீதம்), ஜார்க்கண்ட் (47.1 சதவீதம்) மற்றும் பீகார் (46.6 சதவீதம்) ஆகிய மாநிலங்களில் கடந்த மாதம் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகமாக இருந்தது. அதேசமயம் பஞ்சாப் (2.9 சதவீதம்), சத்தீஸ்கர் (3.4 சதவீதம்) மற்றும் தெலங்கானா (6.2 சதவீதம்) ஆகிய மாநிலங்களில் வேலையின்மை விகிதம் குறைவாக உள்ளது. 

வேலையின்மை

சி.எம்.ஐ.இ. தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ் கூறுகையில், கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரையிலான 2 மாத  காலத்தில் 11.40 கோடி வேலை வாய்ப்பை இழந்திருப்பர் என மதிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் சுமார் 40 கோடி பேர் வேலை பார்க்கின்றனர். அதில் 11.40 கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள் என்பது 4 பணியாளர்களில் ஒருவர் வேலையை இழந்துள்ளார் என்பதை குறிக்கிறது என தெரிவித்தார்.