கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்தை தாண்டியது… பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது….

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்தை தாண்டியது… பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது….

நம் நாட்டில் நேற்று மட்டும் புதிதாக சுமார் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்தை தாண்டியது. மேலும் இந்த தொற்று நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு தழுவிய லாக்டவுனை இம்மாதம் 31ம் தேதி வரை நடைமுறைப்படுத்தியுள்ளது. மேலும் பொது இடங்களுக்கு வரும் போது சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும், மாஸ்க் அணிந்து வர வேண்டும் மற்றும் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்பது உள்ளிட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. 

கொரோனா வைரஸ்

மேலும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பரவல் நினைத்து பார்க்காத அளவில் இருக்கிறது. தினமும் புதிதாக பல ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி வருகிறது. மாநிலங்களின் அறிக்கையின்படி, நாடு முழுவதுமாக நேற்றும் மட்டும் ஒட்டு மொத்த அளவில் புதிதாக சுமார் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை

இதனையடுத்து நம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95,679ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,023ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் நேற்று புதிதாக 2,347 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது மற்றும் கொரோனாவால் அங்கு 63 பேர் உயிர் இழந்துள்ளனர்.