கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியது…. கேரளாவில் நேற்று பாதிப்பு இல்லை..

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியது…. கேரளாவில் நேற்று பாதிப்பு இல்லை..

நம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டி விட்டது. மேலும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையும் 1,700ஐ நெருங்கி விட்டது.

தொற்று நோயானா கொரோனா வைரஸ் நம் நாட்டில் கடந்த மார்ச் மாத மத்தியிலிருந்து மெல்ல மெல்ல பரவ தொடங்கியது. ஏப்ரல் தொடக்கத்தில் வைரஸ் பரவல் வேகமாக இருந்தது மற்றும் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டி விட்டது. 

கொரோனா வைரஸ்

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நேற்று இரவு 9 மணி வரை அளித்த அறிக்கையின்படி, நம் நாட்டில் தொற்று நோயான கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,435ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,694ஆக உயர்ந்துள்ளது.

சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை

மகாராஷ்டிராவில் அதிகளவில் கொரோனாவால் பாதிப்பு மற்றும் உயிர் இழப்புகள் பதிவாகி உள்ளநிலையில், குஜராத், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் பஞ்சாப் ஆகியவை கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் நேற்று புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.