கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது; வதந்திகளை நம்பாதீர்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது; வதந்திகளை நம்பாதீர்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா எதிரொலியால் தமிழகத்தில் முகக்கவசம் அணியும் நிலை ஏற்படவில்லை. கொரோனா வைரஸ் பரவுவதை 100% தடுத்து வருகிறோம்

சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா எதிரொலியால் தமிழகத்தில் முகக்கவசம் அணியும் நிலை ஏற்படவில்லை. கொரோனா வைரஸ் பரவுவதை 100% தடுத்து வருகிறோம். சீனாவில் கொரோனா பரவியதில் இருந்தே தனி வார்டுகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறோம். கொரோனா தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது; மருத்துவ விதிகள் காரணமாக நோயாளி குறித்த துல்லியத் தகவல்களை வெளியிடவில்லை

அரசு வழங்கும் தகவல்களை மட்டுமே பகிருங்கள். கடந்த 4 ஆம் தேதி மஸ்கட்டிலிருந்து வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அவர் ஒரு நீரிழிவு நோயாளி. தற்போது 8 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதிக்கும் பணி  கிங் பரிசோதனை மையத்தில் நடைபெற்று வருகிறது. 27 பேர்  இதுவரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 10 லட்சம் மாஸ்க்குகள் தயாராக உள்ளன.

அமைச்சர் விஜயபாஸ்கர்

சீனா,இத்தாலி,ஈரான், ஜப்பான்,தென் கொரியாவில் இருந்து வருபவர்களை மிக தீவிரமாக பரிசோதனை செய்து வருகிறோம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சில விஷயங்களை தெரிவிக்க உள்ளேன். இனி காலை மற்றும் மாலை நிலவரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு கொடுக்க உள்ளோம். இதுவரை 68 இரத்த மாதிரிகள் எடுத்து உள்ளோம். ஒருவருக்கு தவிர யாருக்கும் கொரோனா இல்லை. சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகம் ஏற்பட்டால் மாஸ்க் அணிந்து கொள்ளலாம். நாள் தோறும் 8500 நபர்கள் விமானம் மூலம் வருகிறார்கள், அனைவரையும் ஸ்கிரீனிங் செய்து வருகிறோம்” என தெரிவித்தார்.