கொரோனாவால் தினமும் 6 ஆயிரம் குழந்தைகள் இறப்பார்கள் – யுனிசெஃப் எச்சரிக்கை

 

கொரோனாவால் தினமும் 6  ஆயிரம் குழந்தைகள் இறப்பார்கள் – யுனிசெஃப் எச்சரிக்கை

கொரோனாவால் தினமும் 6 ஆயிரம் குழந்தைகள் இறப்பார்கள் என்று ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்) எச்சரிக்கை விடுத்துள்ளது.

நியூயார்க்: கொரோனாவால் தினமும் ஆயிரம் குழந்தைகள் இறப்பார்கள் என்று ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்) எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக சுகாதார அமைப்புகள் பலவீனமாவதால் அடுத்த ஆறு மாதங்களில் தினமும் 6,000 குழந்தைகள் வரை இறக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்) எச்சரிக்கை விடுத்துள்ளது.

unicef

கொரோனா வைரஸ் பாதிக்க ஆரம்பித்து ஐந்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுவதாக யுனிசெஃப் கோரியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அடுத்த ஆறு மாதங்களில் தினமும் 6,000 குழந்தைகள் இறக்கக வாய்ப்பிருப்பதாக யுனிசெஃப் கூறியுள்ளது. இது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.