கொரோனாவால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியது!

 

கொரோனாவால்  உலகளவில் பலியானோர்  எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியது!

நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதுவரை உலகம் முழுவதும் 10 லட்சத்து 14 ஆயிரத்து 673  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 கொரோனா வைரஸ் தற்போது  199  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதுவரை உலகம் முழுவதும் 10 லட்சத்து 14 ஆயிரத்து 673  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதனால்  பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.  பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோயில்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்களை  வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி மூடவைக்கக்கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  

 

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை 53ஆயிரத்தை தாண்டியது.  இதுவரை  53,167  பேர் பலியாகி  உள்ளனர் .   இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை அடுத்தகட்டத்தை நெருங்குகிறது.