கொரோனாவால் இறந்தவர் உடலை புதைக்க எதிர்ப்பு: மூலக்கொத்தளம் சுடுகாட்டில் பரபரப்பு!

 

கொரோனாவால் இறந்தவர் உடலை புதைக்க எதிர்ப்பு: மூலக்கொத்தளம் சுடுகாட்டில் பரபரப்பு!

தமிழகத்தில் 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா  பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

TTN

அந்த வகையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த  ஆண்  ஒருவர் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதையடுத்து அவரது உடலை சென்னை மூலக்கொத்தளம் காட்பாடா சுடுகாட்டில் புதைப்பதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல அதிகாரிகள் மேற்கொண்டனர். ஆனால்  இதையறிந்த அப்பகுதி மக்கள் கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை இங்கு புதைக்கக்கூடாது என நள்ளிரவில் எதிர்ப்பு தெரிவித்தனர். 

TT

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசர், இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர்  அங்கிருந்த மக்களிடம்  சமாதானம் பேசினர். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இந்நிலையில் நேற்று மீண்டும்  அப்பகுதி மக்கள் அதிகாரிகள் என்ன சொன்னாலும் இந்த சுடுகாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தவரின் உடலை புதைக்க அனுமதிக்கமாட்டோம் என்று தகராறு செய்தனர். இதனால் மண்டல அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போயுள்ளனர்.