கொரொனா தொடர்பான புள்ளி விவரங்கள் எந்தவித ஒளிவுமறைவுமின்றி வெளியிடப்பட்டு வருகிறது – முதலமைச்சர் பழனிசாமி

 

கொரொனா தொடர்பான புள்ளி விவரங்கள் எந்தவித ஒளிவுமறைவுமின்றி வெளியிடப்பட்டு வருகிறது – முதலமைச்சர் பழனிசாமி

திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வருக்கு இன்று எழுதிய கடிதத்தில், “தமிழகத்தில் ஊரடங்கு குறித்த அறிவிப்பை இனியும் காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவியுங்கள்

திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வருக்கு இன்று எழுதிய கடிதத்தில், “தமிழகத்தில் ஊரடங்கு குறித்த அறிவிப்பை இனியும் காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவியுங்கள். ஊரடங்கால் பாதிக்கப்படுவோரின் வாழ்வாதாரத்திற்கு தேவையானவற்றை உறுதி செய்ய வேண்டும். எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1 கோடியை அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. மக்கள் நலனுக்காகத்தான் தொகுதி மேம்பாட்டு நிதியை எம்.எல்.ஏக்கள் பயன்படுத்துகிறார்கள். எம்.எல்.ஏக்களின் தார்மீக உரிமையை தமிழக அரசு பறித்திருப்பது சரியல்ல. அரசின் கையில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் கோல்டன் ப்ரீயட்தான். அதை சரியாக பயன்படுத்தியாக வேண்டும். தனித்திருத்தல் மட்டும்தான் மக்களால் செய்ய முடிந்தது. மற்ற அனைத்தையும் அரசுதான் ஏற்று செய்ய வேண்டும். கொரோனா விவகாரத்தில் அரசுக்கு ஆலோசனை தர, ஒத்துழைக்க, உதவி வழங்க திமுக தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார். 

stalin

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்டாலின் கருத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தன்னலமற்று பணியாற்றுவோர்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. கொரொனா தொடர்பான புள்ளி விவரங்கள் எந்தவித ஒளிவுமறைவுமின்றி வெளியிடப்பட்டு வருகிறது. அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சுமத்துவது வருத்தமளிக்கிறது. எம்.எல்.ஏக்களின் தொகுதி நிதியை மக்கள் நலனுக்காகவே பயன்படுத்த உள்ளோம். அதை வரவேற்காமல் கண்டிப்பது அவரது சந்தர்ப்பவாத அரசியலை காட்டுகிறது. தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் புள்ளி விவரங்களை stopcorona.tn.gov.in என்ற பிரத்யேக வலைதளத்தில் எந்தவித ஒளிவுமறைவும் இன்றி வெளியிடப்பட்டுவருகின்றன. “கொரோனா” தடுப்பு நடவடிக்கையில் பணிபுரியும் பல்வேறு துறை பணியாளர்களை கொச்சைப்படுத்துவதா? கொரோனா தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.