கொரில்லா தாக்குதல்… பாமக எதிர்ப்பு… அஞ்சி நடுங்கும் அதிமுக அமைச்சர்கள்..!

 

கொரில்லா தாக்குதல்… பாமக எதிர்ப்பு… அஞ்சி நடுங்கும் அதிமுக அமைச்சர்கள்..!

ஓபிஎஸும் இந்த கொரில்லா தாக்குதல் போன்ற திடீர் அர்ச்சனையை சமாளிக்க முடியாமல் திணறி விட்டார்.

அதிமுக அமைச்சர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள். சொன்னதை செய்யாமல் உறவினர் வீட்டுகே செல்ல முடியாத சூழல்.  ஓட்டு வாங்கிவிட்டு சொன்னதை செய்யாமல் மீண்டும் எப்படி ஓட்டு கேட்பது என்ற காரணம்தான். 

ramadoss

 நாங்குநேரி  தொகுதியில் முகாமிட்டுள்ள அமைச்சர்கள் மக்களை சந்திக்கவே பயந்து நடுங்குகின்றனராம். இந்த தொகுதியில் தேர்தல் பிரசாரத்துக்காக 12 அமைச்சர்கள் முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர். மூலைக்கரைப்பட்டியில்  வாக்காளர்களை சந்திக்கச் சென்ற அமைச்சரை அந்த பகுதி மக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர். ஏற்கனவே பாமக ராமதாஸை 7 அமைச்சர்கள் சந்தித்தும் அவர் ஆதரவு எதுவும் தெரிவிக்காத நிலையில், பாமக கட்சியை  சேர்ந்தவர்களும் தங்களது கட்சிக் கொடிகளை அதிமுக தரப்பு பயன்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

edappadi palanisamy

அமைச்சரை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள், லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டனர். அவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல  முடியாமல் அமைச்சர் ஆடிப்போய் விட்டார். அவருடன் இருந்த ஓபிஎஸும் இந்த கொரில்லா தாக்குதல் போன்ற திடீர் அர்ச்சனையை சமாளிக்க முடியாமல் திணறி விட்டார். இதனால் அமைச்சர்கள் ஓட்டுக் கேட்க செல்லும்போது போலீஸ்  படையுடன்தான் செல்கின்றனர்.