கொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான்! அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி!

 

கொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான்! அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி!

கோடிக்கணக்கில் வருமானத்தை அள்ளித் தரும் திருப்பதி வெங்கடாஜலபதி ஆந்திராவில் நின்றுக் கொண்டிருக்கிறார். கோடிக்கணக்கில் வருமானத்தை அள்ளித்தரும் சபரிமலை ஐயப்பன் கேரளாவில் உட்கார்ந்திருக்கிறார்… இங்கே சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் இந்த பக்கம் ஆந்திராவின் திருப்பதியிலும், அந்த பக்கம் கேரளாவின் சபரிமலையிலும் தமிழர்கள் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற பேச்சு ரொம்ப வருஷமாகவே இருக்கிறது.

கோடிக்கணக்கில் வருமானத்தை அள்ளித் தரும் திருப்பதி வெங்கடாஜலபதி ஆந்திராவில் நின்றுக் கொண்டிருக்கிறார். கோடிக்கணக்கில் வருமானத்தை அள்ளித்தரும் சபரிமலை ஐயப்பன் கேரளாவில் உட்கார்ந்திருக்கிறார்… இங்கே சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் இந்த பக்கம் ஆந்திராவின் திருப்பதியிலும், அந்த பக்கம் கேரளாவின் சபரிமலையிலும் தமிழர்கள் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற பேச்சு ரொம்ப வருஷமாகவே இருக்கிறது. வெளிநாட்டின் மீதுள்ள மோகத்தைக் கிண்டலடிக்கும் விதமாக ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்” என்கிற பாடலை உதாரணமாகச் சொல்வோம். ஆனால், ஆந்திராவையும், கேரளாவையும்… இவ்வளவு ஏன், கர்நாடகாவையும் போல நம்மிடம் இருக்கும் இயற்கை வளத்தையும், சுற்றுலா இடங்களையும் நாம் பாதுகாக்கிறோமா என்றால் இதற்கு விடையாக பூஜ்யம் தான் கிடைக்கிறது.

boat

பழநி மலையில் நவபாஷண சிலையை யார் குடைந்தெடுத்தார்கள் என்பதற்கான பதில் இத்தனை வருஷங்களில் கிடைக்கவே இல்லை. கீழடியின் ஆராய்ச்சி அதள பாதாளத்திற்குச் சென்று, ஆட்சியாளர் குஜராத்திற்கு மாற்றப்பட்டதன் மர்மம் இதுவரையில் வெளியாகவில்லை. தமிழகம் முழுவதும் ஆலயங்களில் இருக்கிற விலை மதிக்க முடியாத பழங்கால சிற்பங்கள் எல்லாம் கால் முளைத்து வெளிநாட்டிற்கு நடந்தே சென்றதை அறநிலையத்துறையில் இருந்தவர்கள் எல்லோருமே வேடிக்கை தான்  பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதோ இருக்கிற மகாபலிபுர சிற்பங்களை, ‘இயேசு அழைக்கிறார்’ என்று எழுதி வைப்பதற்கும், காதலின் உயரத்தை கல் சிற்பங்களில் பறைச்சாற்ற, ஆர்ட்டின் எல்லாம் வரைந்து, அதற்குள்ளே அம்புக்குறி போட்டு காயத்ரி, குமார்’ எனப் பெயர்களை செதுக்கி வைக்கிறோம். உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனாவின் மணலில் பீர் பாட்டில்களை ஆவேசமாக உடைத்துப் போட்டு, பார்க்காத காதலியை கண்டபடி திட்டித் தீர்க்கிறோம். 
இந்நிலையில், அரசு அதிகாரிகள் ஒவ்வொரு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் செய்து வரும் அராஜக போக்கும், கொள்ளை அடிக்கும் கமிஷன் தொகையும் நாம் தமிழர் கட்சியின் புண்ணியத்தில் வெளியே வந்திருக்கிறது.  மேற்கு மலைத் தொடர்களில் அமைந்துள்ள கொடைக்கானல் மலைப்பகுதி, இந்தியாவில் மிக முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று. தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரமாகவே சுற்றுலாத்துறை கொடைக்கானலைப் பாதுகாக்க வேண்டிய நிலையில், கமிஷன் வாங்கிக் கொண்டு, கட்டிடங்களைக் கட்ட அனுமதிப்பது, அராஜகம் செய்வது, பிளாஸ்டிக் பொருட்களை அனுமதிப்பது என்று நெடுங்காலங்களாகவே முறையான பராமரிப்பில்லாமலேயே வைத்திருந்தது. 
கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்களில் பெரும்பாலானோர் அங்கு அமைந்துள்ள நட்சத்திர வடிவிலான ஏரியில் படகு சவாரியை மகிழ்ந்து வருவார்கள். பெரும்பாலும் எப்போதும் கூட்டம் அலைமோதும் இந்த படகு குழாமில், காத்திருந்து படகு சவாரியை அனுபவித்து திரும்புபவர்கள் தான் அதிகம். இந்த ஏரியைச் சுற்றி சாலை இல்லாத அந்த காலத்தில் ஏரியைச் சுற்றி அமைந்துள்ள வீடுகளில் வசித்தவர்கள், ஏரியின் மறுகரைக்கு செல்வதற்காக படகுகளை பயன்படுத்தி பயணித்து வந்தனர். 1921 ஆம் ஆண்டு கொடைக்கானல் அரசு நிர்வாகத்தால் அந்த படகுகளை நிறுத்துவதற்கு ஒரு கூரை அமைத்துக் கொள்ள அவர்களுக்கு கொடைக்கானல் படகு குழாம் என்ற பெயரில் அனுமதி அளிக்கப்பட்டது. வெறும் எட்டு சென்ட் அளவிலான நிலம் ஒதுக்கப்பட்டு ஆண்டு வாடகையாக ரூபாய் 8 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. 49 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட இந்த குத்தகை மீண்டும் 1970 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு அப்போதும் ஆண்டு வாடகை அதே 8 ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது கொடுமை தான். கொடுக்கப்பட்ட 8 செண்ட் நிலம போக 10 செண்ட் அளவிற்கு நிலத்தை ஆக்கிரமித்து படகு குழாம் அமைத்துக் கொண்டது. கொடைக்கானல் போட் கிளப் என்ற பெயரில் இயங்கி வந்த இந்த தனியார் அமைப்பு இந்த குத்தகையை எடுத்து 150க்கும் மேற்பட்ட படகுகளை இறக்கி வருடத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்து வந்தது.

boat

இந்நிலையில், இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.வெற்றிக்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொடைக்கானலில், 49 ஆண்டு குத்தகை காலம் முடிந்து பல மாதங்களாகியும் இன்னும் கொடைக்கானல் நிர்வாகம் இந்த படகு குழாமை கையகப்படுத்தவில்லை. ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையால் கொடைக்கானல் நகரத்தில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்த முடியாத நிலையில், கொடைக்கானல் ஏரியை சுத்தப…