கொடைக்கானலில் கோடை விழா ரத்து… ரூ.400 கோடி வருவாய் இழப்பு!

 

கொடைக்கானலில் கோடை விழா ரத்து… ரூ.400 கோடி வருவாய் இழப்பு!

எல்லா ஆண்டும் சுமார் 5 லட்சம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி, கோக்கர்ஸ் வாக், பிரையன்ட் பூங்கா உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று மகிழ்வர். 

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும். கண்ணைக் கவரும் அந்த மலர் கண்காட்சியை பார்க்கவும், வாட்டி வதைக்கும் கோடைகாலத்தை கழிக்கவும் ஆயிரக்கணக்கான மக்கள் கொடைக்கானலுக்கு செல்வது வழக்கம். ஏப்ரல்,மே சீசனிலும் டிசம்பர்,ஜனவரி சீசனிலும் தான் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். எல்லா ஆண்டும் சுமார் 5 லட்சம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி, கோக்கர்ஸ் வாக், பிரையன்ட் பூங்கா உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று மகிழ்வர். 

ttn

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொடைக்கானலில் கோடை விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் கொடைக்கானல் சுங்க சாவடி மற்றும் சுற்றுலா தளங்கள் மூலம் அரசுக்கு கிடைக்கும் ரூ.50 கோடி வருவாயும் விடுதிகள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்டவற்றின் மூலம் அரசுக்கு கிடைக்கும் ரூ.400 கோடி வருமானமும் இந்த ஆண்டு இல்லாமல் போகிவிட்டது.

ttn

அதனை நம்பியே இருக்கும் அப்பகுதி மக்களின் வாழ்வை கொரோனா புரட்டி போட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழல் முடிவுக்கு வந்த பின்னர் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கோடை விழா நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.