கொடுத்து மகிழும் இனிய மாதம் ரமலான்… – நோன்பிருக்கும் இஸ்லாமிய சொந்தங்களுக்கு டாப் தமிழ் நியூஸின் வாழ்த்துக்கள்!

 

கொடுத்து மகிழும் இனிய மாதம் ரமலான்… – நோன்பிருக்கும் இஸ்லாமிய சொந்தங்களுக்கு டாப் தமிழ் நியூஸின் வாழ்த்துக்கள்!

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நாளைத் தொடங்குகிறது. இந்த மாதம் முழுக்க இஸ்லாமியர்கள் பகல் வெளிச்ச நேரத்தில் நோன்பு இருப்பார்கள்… இதன் பின்னணியைத் தெரிந்துகொள்வோம்!

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நாளைத் தொடங்குகிறது. இந்த மாதம் முழுக்க இஸ்லாமியர்கள் பகல் வெளிச்ச நேரத்தில் நோன்பு இருப்பார்கள்… இதன் பின்னணியைத் தெரிந்துகொள்வோம்!

திருக்குரான் 2:185.ல் இப்படி சொல்லப்பட்டுள்ளது…
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).

quoran-78

ரமதான் அல்லது ரம்லான் என்பது இஸ்லாமியர்களின் சந்திரன் அடிப்படையிலான நாட்காட்டியில் ஒன்பதாவது மாதம் ஆகும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் தவிர்த்து ஆரோக்கியமாக உள்ள ஒவ்வொரு இஸ்லாமியரும் நோன்பு இருப்பது அவசியம். நோன்பு என்பது வெறும் உணவு மட்டுமல்ல, தண்ணீர், எச்சில் கூட அருந்தாமல், கோபம், கெட்ட பழக்கங்களைத் தவிர்க்க வேண்டியது கட்டாயம். அல்லாவைத் தொழுவது, புனித நூலான திருக்குரானை ஓதுவதுடன் இந்த மாதத்தில் தான தர்மம் செய்வதையும் ஊக்குவிக்கிறது இஸ்லாம். குரான் இந்த மாதம் தான் இறக்கப்பட்டது என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள் என்பது இந்த மாதத்தின் கூடுதல் சிறப்பு.

ramdan-fasting

இந்த புனிதமான மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலையிலேயே எழுந்து உணவு தயார் செய்து சஹர் எனப்படும் அதிகாலை உணவை காலை 4 மணிக்குள் சாப்பிடுவார்கள்.அதன்பிறகு மீண்டும் மாலை இஃப்தார் எனப்படும் நோன்பு திறப்பின்போதுதான் உணவு கொள்வார்கள். பொதுவாக மாலை 6 மணிக்கு தொழுகை மேற்கொண்டு 6.45 அளவில் நோன்மை முடித்துக்கொள்வார்கள். ஏழைகளுக்கு உதவும் வகையில் மசூதிகளில் மிகப்பெரிய அளவில் இஃப்தார் விருந்துகள் ஏற்பாடு செய்வது வழக்கம். இஃப்தாருக்குப் பிறகு மசூதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடைபெறும்.

ramdan-fasting-02

இஸ்லாமின் ஐந்து கடமைகளில் ரமலான் நோன்பு இருத்தல் என்பத நான்காவது கடமையாகும். நோன்புடன் புனித திருக்குரானைப் படிப்பதும் குரானை மற்றவர்களுக்கு அறிவிப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சொர்கத்தின் வாசல் திறக்கப்படுகிறது, நரகத்தின் வாசல் மூடப்படுகிறது என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கையாகும். வரும் 30 நாட்கள் நோன்பிருந்து சேமித்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு இஸ்லாமியர்கள் வழங்கி மகிழ்கின்றனர். இதனாலேயே ஈகைத் திருநாள் என்றும் தமிழில் அழைக்கப்படுகிறது. இந்த புனிதமான மாதத்தில் நோன்பிருக்கும் அத்தனை இஸ்லாமிய நல் உள்ளங்களுக்கும் நம்முடைய வாழ்த்துக்கள்!