கொடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்: கனிமொழி கோரிக்கை

 

கொடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்: கனிமொழி கோரிக்கை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளை சிபிஐ விசாரித்து உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும் என கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். 

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளை சிபிஐ விசாரித்து உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும் என கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியன்று கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். 

kodanad

இந்த மர்ம மரணங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமூவேலிடம், கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி சயான் வாக்குமூலம் அளித்துள்ளார்.

mathew samuel

அதை மையமாக வைத்து, ஆவணப்படம் ஒன்றை தயாரித்த பத்திரிகையாளர், மேத்யூ சாமுவேல், மீடியா மூலம் அதை வெளி உலகிற்கு அறிமுகம் செய்தார். ஒரு மாநிலத்தின் முதல்வரே கொலை வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதால், தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது. 

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கோடநாடு கொலை, கொள்ளை பற்றிய சர்ச்சைக்குரிய வீடியோ குறித்து தெளிவான விளக்கம் என்றும் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.