கொஞ்சம் காபி, கொஞ்சம் வரலாறு: சர்வதேச காபி தினம்!

 

கொஞ்சம் காபி, கொஞ்சம் வரலாறு: சர்வதேச காபி தினம்!

உற்சாகம் வேண்டும், சுறுசுறுப்பு தேவை என்று நினைத்தாலே  நம் கண்ணுக்கு முன்னாடி வந்து நிற்கும் ஒன்று  காபி. நம்மில் பலருக்கு காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். அதுவும் சிலருக்கு காலையில் ஃபில்ட்டர் காபி இல்லையென்றால் பைத்தியமே பிடித்துவிடும்.

உற்சாகம் வேண்டும், சுறுசுறுப்பு தேவை என்று நினைத்தாலே  நம் கண்ணுக்கு முன்னாடி வந்து நிற்கும் ஒன்று  காபி. நம்மில் பலருக்கு காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். அதுவும் சிலருக்கு காலையில் ஃபில்ட்டர் காபி இல்லையென்றால் பைத்தியமே பிடித்துவிடும். அந்தளவுக்கு மக்கள் காபிக்கு அடிமைகளாக இருந்து வருகின்றனர். அதனைக் கொண்டாடும் விதமாக இன்று சர்வதேச காபி தினம் கொண்டாடப்படுகிறது.

nationalcoffeeday

காபிச் செடியின் பூர்வீகம் ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள எத்தியோப்பியா. இது தென் எத்தியோப்பியாவில் காஃவா என்னுமிடத்தில் முதலில் கண்டு பிடிக்கப்பட்டது. அரபு மொழியில் கஹ்வா என்றால் காபி செடி என்று பொருள். காபி 12 ஆம் நூற்றாண்டுகளில் எத்தியோப்பியாவிருந்து எகிப்து மற்றும் எமன் நாடுகளுக்குப் பரவியது.

ஆனால் 17ஆம் நூற்றாண்டில் தான் இந்தியாவிற்குக் காபி பரவியது. பாபா புதான் என்ற சிக்மங்களூர்க்காரர் மெக்காவிற்குப் புனித யாத்திரை சென்றுவிட்டு திரும்புகையில் கொஞ்சம் காபி விதைகளையும் கொண்டுவந்து தன் தோட்டத்தில் பயிரிட்டார். அதனை மூலம் தான் காபி இந்தியாவிற்குள் புகுந்தது என்றும் கூறப்படுகிறது.

coffee

காபியைச்  சுறுசுறுப்பு, உற்சாகம் என்று சொன்னாலும் காபி என்பது நம் உடலுக்கு ஆரோக்கியமற்றது என்ற கருத்துக்கள் பல இன்னும் விவாதத்திற்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. காபியில் கூட ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சில ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. சில குறிப்பிட்ட வியாதிகள் ஏற்படும் இடர்பாட்டை இது பெருமளவில் குறைக்கும் என்றும் சொல்லப்படுவதுண்டு.

காபிக்குப் பல நூற்றாண்டு வரலாறு உண்டு. காபி இன்று பலவகையான மாற்றங்களுக்குட்பட்டு இருக்கிறது. ஃபில்டர் காபி, டிகிரி காபி, டிகாக்ஷன் காபி, வடிகட்டாத எஸ்ப்ரஸ்ஸோ காபி, இன்ஸ்டன்ட் காபி, கிரீன் காபி என்று பல அவதாரங்களைக் காபி எடுத்திருக்கிறது. அதனால் காபியை குடியுங்கள், காபி தினத்தை கொண்டாடுங்கள்!