‘கொஞ்சம் என்ன பேசவிடுங்க’: வனிதா விஜயகுமாருடன் மல்லுக்கட்டும் சாக்ஷி அகர்வால்

 

‘கொஞ்சம் என்ன பேசவிடுங்க’: வனிதா விஜயகுமாருடன் மல்லுக்கட்டும் சாக்ஷி அகர்வால்

ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பிக்  பாஸ் 3 கிழமை முதல் ஒளிபரப்பாகிறது. முதல் நாளான நேற்று ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ‘வானத்தை போல’ விஜயகாந்த் குடும்பம் போல் ஒற்றுமையாக .

ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பிக்  பாஸ் 3 கிழமை முதல் ஒளிபரப்பாகிறது. முதல் நாளான நேற்று ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ‘வானத்தை போல’ விஜயகாந்த் குடும்பம் போல் ஒற்றுமையாக . ஆட்டம் பாட்டம் என்று குதுகலத்துடன் இருந்தனர். இதை பார்த்த ரசிகர்கள் போட்டியாளர்களுக்கு இடையே மோதல் எப்போது வெடிக்கும் என்றும் ஆவலுடன் இருப்பதாகக் கூறினார். 

கவலை படாதீங்க பாஸ்….இதோ இன்றைய நிகழ்ச்சியில் கண்டிப்பாக ஒரு பூகம்பம் இருக்கு. ஆம்… இன்றைக்கான புரோமோ நிகழ்ச்சியில் ஹவுஸ் மேட்ஸ் சண்டை போடுவது போல் உள்ளது.. காலை வேலையில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளில் அமர்ந்துள்ளனர். அப்போது சாக்ஷி தனக்கு பொங்கல் பிடிக்காது’ என்று கூறினார். அதற்கு வீட்டின்  இந்த வார தலைவியான வனிதா அவரிடம்,  ‘பொங்கல் உங்களுக்குப் பிடிக்காதா? அல்லது உடம்புக்கு ஒத்து கொள்ளாதா? என கேட்க அதற்குச் சாக்ஷி விளக்கம் அளிக்கக் கூட சந்தர்ப்பம் தராமல் மீண்டும் மீண்டும் தான் சொன்னதையே சொல்லி வருகிறார் வனிதா. 

இதனால் கடுப்பான சாக்ஷி, ‘என்ன கொஞ்சம் பேசவிடுங்க ‘ என்று கடுமையாகப் பேசியுள்ளார். எது எப்படியோ பிக்பாஸ் திட்டம் வழக்கம்போல் வெற்றிகரமாக ஆரம்பித்துவிட்டது. 

முன்னதாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவால் தான் முதல் பிரச்சனை ஏற்படும் என்று கூறியிருந்து குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சண்டை எந்த அளவுக்கு செல்கிறது என்பதை இன்றைய முழு நிகழ்ச்சியைப் பார்த்து தெரிந்து கொள்வோம்.