கொச்சியில் மக்களை கவர்ந்த ‘கொரோனா’…ஆனா இது வைரஸ் இல்ல! – பிரபலமாகும் ஜவுளி கடை

 

கொச்சியில் மக்களை கவர்ந்த ‘கொரோனா’…ஆனா இது வைரஸ் இல்ல! – பிரபலமாகும் ஜவுளி கடை

கொரோனா என்ற பெயரில் இயங்கி வரும் ஜவுளி கடை கொச்சியில் பிரபலமாகி வருகிறது.

கொச்சி: கொரோனா என்ற பெயரில் இயங்கி வரும் ஜவுளி கடை கொச்சியில் பிரபலமாகி வருகிறது.

உலகெங்கிலும் கொரோனா என்ற சொல் இப்போது மிகவும் பயங்கரமான வார்த்தையாக பார்க்கப்படுகிறது. ஆனால் கேரளாவின் முவாட்டுபுழா நகரத்தில் இந்தப் பெயரை பார்த்து மக்களின் கண்கள் புன்னகை பூக்கிறது. கேரள மாநிலத்தின் வணிக தலைநகரிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கொரோனாஜவுளிக் கடை. அதன் உரிமையாளர் கொரோனா பரிட்என்று பிரபலமாக அறியப்படுகிறார்.

ttn

இப்போது, நான் இங்கே ஒரு பிரபலமான நபர். பலர் என்னுடன் செல்ஃபி எடுக்க விரும்புகின்றனர். மற்றவர்கள் என்னைப் பார்க்கும்போது சிரிப்பார்கள். பலர் வாகனங்களில் செல்லும்போது இந்தக் கடையின் போர்டை பார்த்து ஆச்சர்யம் கொள்கிறார்கள்.என்றார் பரீத்.

கொரோனா டெக்ஸ்டைல்ஸ் கடையில் அனைத்து துணி பொருட்களும் விற்கப்படுவதோடு ஒரு தையல் மெஷினும் உள்ளது. கடைக்கு இந்தப் பெயரை எவ்வாறு தேர்வு செய்தார் என்று கேட்டபோது, “நான் அகராதியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கொரோனா என்ற வார்த்தையை பார்த்து ஈர்க்கப்பட்டேன்” என்றார். தனது கடைக்குள் நுழையும் அனைவரும் சானிடிசரை கொண்டு கைகழுவி விட்டு வருமாறு பரீத் ஏற்பாடு செய்துள்ளார்.