கைவிரித்த ஸ்டாலின்: அப்செட்டான துரைமுருகன்

 

கைவிரித்த ஸ்டாலின்: அப்செட்டான துரைமுருகன்

நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல் களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியின் தலைமையின் கீழ் மற்ற கட்சிகள் களம் காணவுள்ளன. இந்நிலையில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

durai ttn

கடந்த தேர்தலில் ஏ.சி. சண்முகம் பணத்தை வாரி செலவு செய்து செய்துள்ளார். இந்த முறையும் அதிகமாகச்  செலவழிக்க இருப்பதாகவும் அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

durai ttn

இந்நிலையில் இது குறித்து ஸ்டாலினிடம் பேசிய துரைமுருகன், வேலூர் தொகுதியில் நெருக்கடி அதிகம் இருக்கும் என்பதால், கட்சி சார்பாக நிதியுதவி அளிக்கக் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ஸ்டாலின், ‘கட்சியோட பொருளாதார நிலைமை கட்சியின் பொருளாளரான  உங்களுக்கே தெரியும்.  கட்சி சார்பாகக் கொடுக்க வாய்ப்பில்லை’ என்று கறாராகச் சொல்லியிருக்கிறார். இதனால் துரைமுருகன் அப்செட்டாக இருப்பதாக திமுக வட்டாரத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.