‘கைவினை பொருட்கள் செய்தல் ,ஓவியம் வரைதல்..’ ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக கழிக்கும் ஆதரவற்ற குழந்தைகள்!

 

‘கைவினை பொருட்கள் செய்தல் ,ஓவியம் வரைதல்..’ ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக கழிக்கும் ஆதரவற்ற குழந்தைகள்!

கொரோனாவில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்விகள் என அனைத்தும் மூடப்பட்டதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இயங்கி வரும் தனியார் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் வசித்து வரும் குழந்தைகள் விடுமுறை நாட்களை பயனுள்ளதாக கழித்து வருகின்றனர். 

ttn

இந்த இல்லத்தில் இருக்கும் 100 குழந்தைகள் நாகப்பட்டினத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஊரடங்கால் தற்போது அங்கு 10 குழந்தைகள் மட்டுமே இருக்கும் நிலையில் அவர்களை பராமரிக்க 1 பணிப்பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விடுமுறை நாட்களில் அந்த குழந்தைகள் ஓவியம் வரைவது, கைவினை பொருட்கள் செய்வது, யோகா, புத்தகம் வாசிப்பு என பயனுள்ளதாக கழித்து வருகின்றனர். வழக்கமாக மற்ற நண்பர்களுடன் விளையாடிக் கொண்டே இருந்த அவர்களுக்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து பயனுள்ள செயல்களை செய்வது புதுவிதமான அனுபவமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.