கைவிட்ட அதிமுக… ரஜினியை சந்திக்கிறார் மோடி?

 

கைவிட்ட அதிமுக… ரஜினியை சந்திக்கிறார் மோடி?

தமிழகம் வர இருக்கும் பிரதமர் மோடி ரஜினியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சென்னை: தமிழகம் வர இருக்கும் பிரதமர் மோடி ரஜினியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுரை தோப்பூரில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எந்த இடத்தில் அமைப்பது? எய்ம்ஸ் அமைப்பதற்கான சூழல் இருக்கிறதா? உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளுக்கு பின்னர் மத்திய அரசு இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது. 

இதற்கிடையே எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி ஜனவரி 27-ம் தேதி தமிழகம் வர இருப்பதாக கூறப்படுகிறது.மேலும், இந்த அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்குப் பின்னர் மதுரையில் பாஜகவின் பிரமாண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அதில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் கூறிகின்றன.

இந்நிலையில், ஜனவரி 27-ம் தேதி தமிழகம் வரும் மோடி அப்போது நடிகர் ரஜினிகாந்த்தை சந்த்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்திருக்கும் ரஜினி இன்னும் கட்சி தொடங்காமல் இருந்து வருகிறார். எனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு அவர் தேர்தல் களம் காண்பாரா என்ற கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர். 

இந்த சூழலில் ரஜினியை சந்திக்கும் மோடி, நாடாளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை ஆரம்பித்து பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என அவரிடம் வலியுறுத்த வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மேலும், பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக தயாராக இல்லை என்ற தகவல்கள் வெளியாகி இருப்பதாலும், தமிழகத்தில் அதிமுகவுக்கு செல்வாக்கு குறைந்திருப்பதாலும், பாஜகவுக்கு தமிழகத்தில் தற்போது இருக்கும் ஒரே சாய்ஸ் ரஜினி மட்டும்தான். எனவே இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.