கைவிடப்பட்ட 1000 கோடி மெகா பட்ஜெட் திரைப்படம்: ரசிகர்கள் அதிர்ச்சி!

 

கைவிடப்பட்ட 1000 கோடி மெகா பட்ஜெட் திரைப்படம்: ரசிகர்கள் அதிர்ச்சி!

மகாபாரத பின்னணியில் மெகா  பட்ஜெட்டில் உருவாக இருந்த மோகன்லால் திரைப்படம் கைவிடப்பட்டதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

கேரளா: மகாபாரத பின்னணியில் மெகா  பட்ஜெட்டில் உருவாக இருந்த மோகன்லால் திரைப்படம் கைவிடப்பட்டதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

மெகா பட்ஜெட் 

mohanlal

பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்டத்தைத் தொடர்ந்து, அதிக பொருட்செலவில் திரைப்படங்களை எடுத்து சாதனை படைக்கத் தென்னிந்திய திரையுலகம் முனைப்புக் காட்டி வந்தது. அந்த வகையில்  மலையாளத்தில் மோகன் லால் நடிக்கவுள்ள படத்தை  சுமார் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

பீமனாக மோகன் லால்

mohnalal

இந்த பிரம்மாண்ட பொருட்செலவில், உருவாக இருந்தது இயக்குநரும், கதாசிரியருமான எம்.டி.வாசுதேவன் நாயர் மகாபாரதத்தைத் தழுவி எழுதிய  ‘ரண்டமூழம்’ என்ற நாவல் தான். பீமனின் பார்வையிலிருந்து இக்கதை உருவாக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டது.  மேலும் இதை இயக்குநர்  ஸ்ரீகுமார் மேனன்  இயக்க மோகன் லால் பீமனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால்  இப்படம் குறித்த அறிவிப்பு வெளியான பிறகும் படப்பிடிப்புக்கான பணிகள் எதுவும் தொடங்கவில்லை. 

கைவிடப்பட்ட  திரைப்படம் 

mohanlal

இந்நிலையில் .எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளருக்கிடையே சரியான உடன்பாடு ஏற்படாததால் , தொடர்ந்து படத்தின் பணிகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக இப்படம் கைவிடப்பட்டதாக  லண்டனைச் சேர்ந்த தயாரிப்பாளர் பி.ஆர்.ஷெட்டி அறிவித்துள்ளார். மேலும் மகாபாரத பின்னணியில் மற்றொரு படம் தயாரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

முன்னதாக கதாசிரியர்  எம்.டி.வாசுதேவன் ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகும்,  படத்தைத் தொடங்காமல் படக்குழுவினர் தாமதம் செய்து வருவதாக  எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்க: மக்களவை, இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு; லயோலா கருத்துக்கணிப்பில் தகவல்!