“கையெடுத்து வணங்குகிறேன்” புதிய சங்கம் வேண்டாம் : பாரதிராஜாவுக்கு கே.ராஜன் வேண்டுகோள்

 

“கையெடுத்து வணங்குகிறேன்” புதிய சங்கம் வேண்டாம் : பாரதிராஜாவுக்கு கே.ராஜன் வேண்டுகோள்

சமீபத்தில் புதிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் உருவாக உள்ளதாகவும் அதற்கு பாரதிராஜா தலைவராக இருக்க போவதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து இந்த தகவல் உண்மை என்றும் புதிதாக தயாரிப்பாளர்கள் சங்கம் உருவாக்கப்பட உள்ளதாகவும் கடந்த 3 ஆம் தேதி இயக்குனர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், இப்போதைய காலகட்டத்தில் இன்னொரு சங்கம் அவசியமாவதாகவும் தாய் சங்கத்தை உடைக்கவில்லை, பிரித்தெடுக்கவும் இல்லை எனவும் அவள் அப்படியே மெருகுற இருப்பாள் என்றும் ஒருமடை அடைத்துக் கொண்டால் மற்றொரு மடையை திறப்பது போல தான் இந்த சங்கம் தொடங்கப்பட உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

“கையெடுத்து வணங்குகிறேன்” புதிய சங்கம் வேண்டாம் : பாரதிராஜாவுக்கு கே.ராஜன் வேண்டுகோள்

பாரதிராஜா தலைமையில் புதிய சங்கம் உருவாக உள்ளது சில தயாரிப்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஏற்கனவே இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தை பாரதிராஜா உடைப்பது நியாயம் இல்லை என்றும் புதிய சங்கம் வேண்டாம் என பாரதிராஜாவை கையெடுத்து வணங்குகிறேன் என்றும் கூறினார். மேலும், 50 ஆண்டுகளாக இருக்கும் தாய்சங்கத்திற்கு பாரதிராஜா வர வேண்டும், வந்து எங்களை வழிநடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.