கையெடுத்து கும்பிட்ட பெண்: ஓங்கி அறைந்த போலீஸ் அதிகாரி; முதல்வர் பிரசார கூட்டத்தில் பரபரப்பு!

 

கையெடுத்து கும்பிட்ட பெண்: ஓங்கி அறைந்த போலீஸ் அதிகாரி; முதல்வர் பிரசார கூட்டத்தில் பரபரப்பு!

வாகன நெரிசலில் சிக்கிய பெண்ணை பெண்ணை, காவல் ஆய்வாளர் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தேனி : வாகன நெரிசலில் சிக்கிய பெண்ணை பெண்ணை, காவல் ஆய்வாளர் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

cm

மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் திமுக திமுக கட்சிகளுக்கு ஆதரவாக, அக்கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தேனி  மக்களவை தொகுதியில், களம் காணும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார். முதல்வரின் வருகையால் நேரு சிலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டனர். 

police

இந்நிலையில் அந்த சாலை வழியே, டாடா மேஜிக் வாகனம் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு வந்தது. இதை கண்ட அங்கிருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகேசன் வண்டியை வேகமாக எடு என்று அதட்டினார்.அதற்குள் வாகனத்திலிருந்த பெண் ஒருவர் ஆய்வாளரை பார்த்துக்  கையெடுத்துக் கும்பிட்டார். இதனால் கோபமான காவல் ஆய்வாளர் அந்த பெண்ணை ஓங்கி ஒரு அறை  அறைந்தார்.   இதனால் அந்த பெண் மட்டுமல்லாது அங்கிருந்த ஒட்டு மொத்த நபர்களும் அதிர்ச்சியடைந்தனர். 

police

பணிச்சுமையைச் சாமானிய பெண்ணிடம் வெளிப்படுத்திய சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதையும் வாசிக்க: சந்தியா கொலை வழக்கு: தலையை மூன்று மாதங்களாக தேடும் போலீஸ்: மூட்டையாக கட்டி உடல்பாகங்களை கொடுத்த அவலம்!