கைக்குழந்தையை கொன்ற குரங்கு: உத்தர பிரதேசத்தில் பரிதாபம்

 

கைக்குழந்தையை கொன்ற குரங்கு: உத்தர பிரதேசத்தில் பரிதாபம்

பிறந்து 12 நாட்கள் மட்டுமே ஆன கைக்குழந்தையை குரங்கு கடித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ: பிறந்து 12 நாட்கள் மட்டுமே ஆன கைக்குழந்தையை குரங்கு கடித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மொஹல்லா கச்சேரா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் அமர்ந்தவாறு பிறந்து பன்னிரெண்டு நாட்கள் ஆன தனது குழந்தைக்கு பால் ஊட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த குரங்கு பெண்ணிடம் இருந்த குழந்தையை நொடிப்பொழுதில் பிடுங்கி சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டனர். இதனை கேட்ட அவரது குடும்பத்தினர் வெளியே ஓடிவந்து, குரங்கை விரட்டிச் சென்றனர். ஆனால் அவர்களிடம் பிடிபடாமல் மரங்களின் மீதும் வீடுகளின்மீதும் தாவி சென்று குழந்தையுடன் குரங்கு மறைந்துவிட்டது.

இதனையடுத்து சிறிது நேரத்தில் அருகில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் கடிபட்ட காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அந்த குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்