கைகொடுக்காத கவர்ச்சி: பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்!

 

கைகொடுக்காத கவர்ச்சி: பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்!

ஷாஜகான், சிவப்பதிகாரம், குரு என் ஆளு, குசேலன், ரௌத்ரம், கோ  ஆகிய படங்களில் நடித்தார்.

நடிகை சோனா  பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார், இதன்பிறகு ஷாஜகான், சிவப்பதிகாரம், குரு என் ஆளு, குசேலன், ரௌத்ரம், கோ  ஆகிய படங்களில் நடித்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பணியாற்றிவந்த சோனாவுக்கு  சமீபகாலமாகப் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.  இதையடுத்து நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான கனிமொழி படத்தை தயாரித்த அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து  செயற்கை வைர நகை வியாபாரத்தில் இறங்கி இன்னும் அதளபாதாளத்திற்கு சென்றார். 

sona

இந்நிலையில் மலையாளத்தில்  குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் சோனா நீண்ட இடைவெளிக்குப் பிறகு பச்ச மாங்கா படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தற்போது தமிழ் படங்களிலும் கட்டாகி வரும் அவர், திரிஷா நடித்துள்ள பரமபத விளையாட்டு,  வரலட்சுமியின்  சேசிங் படத்திலும் நடித்துள்ளார். 

sona

நடிப்பு தொழில் தான் தன்னை காப்பாற்றியுள்ளதாகக் கூறியுள்ள சோனா, தொடர்ந்து அதில்  கவனம் செலுத்த போவதாகவும்  உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.