கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு!

 

கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு!

தமிழகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் சமைப்பதற்கு கேஸ் சிலிண்டர்களையே நம்பியிருக்கின்றனார். தற்போது கடும் போராட்டத்துக்கு பிறகும் பால் விலைகள் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பால் தொடர்புடைய பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், திடீரென்று சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டர் விலையை திடீரென உயர்த்தியுள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான நமது நாட்டு ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் கியாஸ் சிலிண்டரின் விலையை நிர்ணயிக்கிறார்கள். 

gas cylinder

அப்படி ஒவ்வொரு மாதமும் கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றியமைப்பதால் கடந்த மாதத்தைக் காட்டிலும் இந்த மாதத்தில் கியாஸ் சிலிண்டரின் விலை திடீரென 76 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல், 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா சிலிண்டரின் விலை  76 ரூபாய் அதிகரித்து, 620 ரூபாயிலிருந்து, 696 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பயன்பாட்டிற்கு இல்லாமல், வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலையும், 120 ரூபாய் உயர்ந்து 1319 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எரிவாயுவின் திடீர் விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.