கேள்வி கேட்க முடியாத இடத்தில் இருந்து பேசும் மோடி… சிஏஏ பற்றி ஐந்து விமர்சகர்களுடன் விவாதிக்க வேண்டும் – ப.சிதம்பரம் அழைப்பு

 

கேள்வி கேட்க முடியாத இடத்தில் இருந்து பேசும் மோடி… சிஏஏ பற்றி ஐந்து விமர்சகர்களுடன் விவாதிக்க வேண்டும் – ப.சிதம்பரம் அழைப்பு

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவறான கருத்தைப் பரப்பி வருகின்றன என்று பிரதமர் மோடி கூறி வரும் நிலையில், இது பற்றி ஐந்து பேருடன் விவாதம் நடத்தி சந்தேகத்தை போக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் ஐடியா கொடுத்துள்ளார்.குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு நிலவுகிறது. ஆதரவு உள்ளது போன்று ஆளும் பா.ஜ.க சார்பில் காட்ட தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவறான கருத்தைப் பரப்பி வருகின்றன என்று பிரதமர் மோடி கூறி வரும் நிலையில், இது பற்றி ஐந்து பேருடன் விவாதம் நடத்தி சந்தேகத்தை போக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் ஐடியா கொடுத்துள்ளார்.

p.chidambaram

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு நிலவுகிறது. ஆதரவு உள்ளது போன்று ஆளும் பா.ஜ.க சார்பில் காட்ட தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பா.ஜ.க-வின் மிஸ்டு கால் மூலம் ஆதரவு தெரிவிக்கும் திட்டத்துக்கு ஆதரவு திரட்டிய விதம் ஊரே சிரித்தது. ஆனால், “குடியரிமை திருத்தச் சட்டம் இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்து வருகின்றன” என்று மோடி, அமித்ஷா உள்ளிட்டவர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
“இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம்… யார் இந்தியர் என்பதை எப்படி முடிவு செய்வீர்கள்” என்பது உள்பட பல கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இதற்கு மத்திய அரசு தரப்பில் பதில் இல்லை. இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் ஐந்து பேரிடம் விவாதித்து சந்தேகத்தை தீர்க்க மோடி முன்வர வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனை கூறியுள்ளார்.

modi

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில். “பிரதமர் மோடி சிஏஏ வழங்குவதற்காகத்தான், குடியுரிமையைப் பறிப்பதற்கு இல்லை என்கிறார். எங்களில் பலர் சிஏஏ பல குடிமக்களை குடியுரிமை அற்றவர்கள் என்று அறிவித்து குடியுரிமையைப் பறித்துவிடும் என்ற எண்ணுகிறோம். 
மோடி உயரமான இடத்தில் நின்றுகொண்டு அமைதியாக, கேள்வி கேட்க முடியாத மக்களிடம் பேசுகிறார். நாங்கள் ஊடகத்தின் வழி பேசுகிறோம். பத்திரிகையாளர்களிடமிருந்து வரும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறோம். 
மோடி தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதில்லை. விமர்சிப்பவர்கள் அவருடன் பேசுவதற்கான வாய்ப்பும் அமைவதில்லை. அதனால் இதற்கு ஒரே வழி, மோடி தன்னை வெளிப்படையாக விமர்சிக்கும் ஐந்து விமர்சகர்களை தேர்வு செய்து, அவர்களுடன் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யும் வகையிலான கேள்வி – பதில் விவாதத்தை நடத்த வேண்டும். இதன் மூலம் மக்கள் சிஏஏ பற்றிய முடிவுக்கு வருவார்கள். என்னுடைய இந்த ஆலோசனையை ஏற்று ஆக்கப்பூர்வமான பதிலை அளிப்பார் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.