கேரள வெள்ள சேதம் – மறுகட்டமைப்புக்கு 1700 கோடி வழங்கியது உலக வங்கி!

 

கேரள வெள்ள சேதம் – மறுகட்டமைப்புக்கு 1700 கோடி வழங்கியது உலக வங்கி!

கேரளாவில் கடந்த வருட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுகட்டமைப்புக்காக, 250 மில்லியன் டாலர்கள் அதாவது தோராயமாக 1,700 கோடி ரூபாய் பணத்தை வழங்கியுள்ளது உலக வங்கி. இந்தியாவில் மாநில அரசின் திட்டங்களுக்கு நேரடியாக நிதி உதவி செய்யும் புதிய திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட முதல் தொகையை கேரளா பெற்றிருக்கிறது.

கேரளாவில் கடந்த வருட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுகட்டமைப்புக்காக, 250 மில்லியன் டாலர்கள் அதாவது தோராயமாக 1,700 கோடி ரூபாய் பணத்தை வழங்கியுள்ளது உலக வங்கி. இந்தியாவில் மாநில அரசின் திட்டங்களுக்கு நேரடியாக நிதி உதவி செய்யும் புதிய திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட முதல் தொகையை கேரளா பெற்றிருக்கிறது. கேரளாவுக்கு ஒதுக்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ள மொத்த தொகை சுமார் 3,400 கோடி ரூபாய். அதில் வந்த முதல் தவணை இந்த 1,700 கோடி.

Kerala Floods

மேற்படி திட்டங்களுக்கான உலகவங்கியின் இந்திய குழு தலைவர் பாலகிருஷ்ண மேனன் “கேரளாவுக்கு வெறுமனே பொருளாதார உதவிகள் மட்டுமல்லாமல், உலக வங்கியின் தொடர்புகளைக்கொண்டு பல்வேறு தொழில்நுட்ப உதவிகளையும் பெற்றுத்தருவோம்” என உறுதி அளித்திருக்கிறார். ஏற்கெனவே கடந்த வாரம் துபாய் ரெட் கிராஸ் கிளை அமைப்பு கேரளாவுக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்குவதற்கான புரிந்துணர்வில் கையொப்பமிட்டது.