கேரள விருந்தினர் மாளிகை மீது தாக்குதலுக்கு முத்தரசன் கண்டனம்

 

கேரள விருந்தினர் மாளிகை மீது தாக்குதலுக்கு முத்தரசன் கண்டனம்

சபரிமலை விவகாரம் தொடர்பாக சென்னையில் இருக்கும் கேரள விருந்தினர் மாளிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: சபரிமலை விவகாரம் தொடர்பாக சென்னையில் இருக்கும் கேரள விருந்தினர் மாளிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள அரசுக்குச் சொந்தமான சுற்றுலா அலுவலகத்தின் மீது நேற்று (02.01.2019) நள்ளிரவில் இந்துத்துவ அமைப்பினர் கல்வீசி தாக்கியுள்ளனர்.

இத்தாக்குதல் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஆனால் தாக்குதல் சம்பவத்தில் சுமார் 15 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டதாக தகவல்கள் உள்ளன. 

இத்தாக்குதல் சம்பவத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.  மேலும் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என கூறியுள்ளார்.