கேரள மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.. தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நடவடிக்கை!

 

கேரள மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.. தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நடவடிக்கை!

இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை முதலில் 17 ஆக இருந்த நிலையில், இன்று 170 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் எனப்படும் கொடிய வகை நோய் சீனாவில் உள்ள வூகான் நகரில் பரவத்தொடங்கி சீனா முழுவதும் பரவிவிட்டது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை முதலில் 17 ஆக இருந்த நிலையில், இன்று 170 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் அண்டை நாடுகளில் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி, சீனாவில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் அவர்களை கண்கானிக்க மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

ttn

கேரளாவை சேர்ந்த மாணவர் ஒருவர் சீனா, வூகான் நகரின் படித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் சமீபத்தில் கேரளா சென்றுள்ளார். அவருக்கு கடந்த சில நாட்களாக இருமல், கடும் காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ்  பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவரின் விவரங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. அந்த மாணவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிற்கும் பரவியுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.