கேரள கன்னியாஸ்திரி வன்கொடுமை வழக்கு:  பாதிரியாரின்  ‘க்ராஸியரில்’ பெண்ணின் உள்ளாடை 

 

கேரள கன்னியாஸ்திரி வன்கொடுமை வழக்கு:  பாதிரியாரின்  ‘க்ராஸியரில்’ பெண்ணின் உள்ளாடை 

கேரள  மாநிலம், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த, பிராங்கோ என்ற பாதிரியார், அவரது கட்டுப்பாட்டில் பணியாற்றி வந்த கன்னியாஸ்திரியை, 2014 முதல்  2016 ஆண்டு வரையில், 13 முறை, பாலியல் பலாத்காரம் செய்ததாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

கேரள  மாநிலம், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த, பிராங்கோ என்ற பாதிரியார், அவரது கட்டுப்பாட்டில் பணியாற்றி வந்த கன்னியாஸ்திரியை, 2014 முதல்  2016 ஆண்டு வரையில், 13 முறை, பாலியல் பலாத்காரம் செய்ததாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் நாடு முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.  புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கிறிஸ்தவ அமைப்புகளுடன் சேர்ந்து, ஐந்து கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, ‘இந்த வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும்’ என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், பாதிரியார் பிராங்கோ மீதான பாலியல் பலாத்கார புகாரை வாபஸ் பெற்றால், 5 கோடி ரூபாய் கொடுப்பதாக, அவரது நண்பர்கள் மூலம் பேரம் பேசப்பட்டது என, பலாத்காரத்துக்கு ஆளான கன்னியாஸ்திரியின் சகோதரர் தெரிவித்திருந்தால். ஏற்கனவே, பிராங்கோ மீது புகார்கள் கூறப்பட்ட நிலையில், அவர் பேரம் பேசுவதாக கூறப்பட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த இரு போலீஸ் அதிகாரிகளை கேரள அரசு இடமாற்றம் செய்தது. 

இந்நிலையில், பிரபல கார்ட்டூனிஸ்ட் கே.கே.சுபாஷ், கேரள பாதிரியாரையும், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளையும் வைத்து, வரைந்திருந்த கார்ட்டூனுக்கு கேரள லலித் கலா அகாடமி விருது கொடுத்துள்ளது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. கேரள கத்தோலிக்க பாதிரியார்கள் சங்கம் இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். 
‘தனது கார்டூனில், பாதிரியார் பிராங்கோவை இழிவுபடுத்துவதற்கு பதிலாக, ஒட்டுமொத்த கிறிஸ்துவர்களையும், கிறிஸ்து மதத்தையும் இழிவு படுத்தியிருக்கிறார். தங்களுக்கு கிறிஸ்துவர்கள் வாக்களிக்காததால், கம்யூனிஸ்ட்கள் கிறிஸ்துவர்களின் மத உணர்வுகளோடு விளையாடுவதாக சந்தேகப்படுகிறோம். உடனடியாக அந்த கார்ட்டூனுக்கு வழங்கப்பட்ட விருதைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

பாதிரியார் பிராங்கோவை தினவெடுத்த சேவலாகவும், அவருக்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ, ஜார்ஜ் அவரைப் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருப்பதைப் போலவும், இன்னொரு பக்கம் இதைப் பார்த்து, பயந்து கன்னியாஸ்திரிகள் ஓடுவதைப் போலவும், பிராங்கோ உயர்த்திப் பிடித்திருக்கும் க்ராஸியரில் பெண்ணின் உள்ளாடை மாட்டப்பட்டிருப்பதைப் போலவும் தன்னுடைய கார்ட்டூனில் சித்தரித்திருந்தார் சுபாஷ். 

கேரள கத்தோலிக்க பாதிரியார்களின் கண்டனங்களைத் தொடர்ந்து, கேரள அரசு, லலித் கலா அகாடமியிடம், இந்த வருடம் கார்ட்டூனுக்கு கொடுக்கப்பட்ட விருதை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தியுள்ளது.
நமது டாப் தமிழ் நியூஸ் நிருபரிடம் பேசிய கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு.பாலன், ‘கேரள அரசு கார்ட்டூனுக்குக் கொடுக்கப்பட்ட விருதை மறுபரிசீலனைச் செய்யும். பாதிரியார் பிராங்கோவை இழிவுப்படுத்தி வரையப்பட்ட கார்ட்டூனை ஒத்துக் கொண்டாலும், மத சின்னங்களை இழிவுப்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை பரிசீலனைச் செய்கிறோம்’ என்றார்.