கேரளாவை உலுக்கிய மட்டன் சூப் கொலைகள்: ஜோலியின் முகத்தில் இருந்த துப்பட்டாவை நீக்கிய இளைஞர் கைது!

 

கேரளாவை உலுக்கிய மட்டன் சூப் கொலைகள்:  ஜோலியின் முகத்தில் இருந்த துப்பட்டாவை நீக்கிய இளைஞர் கைது!

2008ஆம் ஆண்டு மாமனார் டாம் தாமஸையும் 2011ஆம் ஆண்டு கணவர் ராய் தாமஸையும் கொலை செய்துள்ளார்.

மட்டன் சூப்பில் சயனைடு கொடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை கொலை செய்த ஜோலி  தாமஸ் முகத்திலிருந்த துணியை நீக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார். 

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோலி  தாமஸ் என்பவர் கணவரின் சகோதரன் மீது இருந்த காதல் மோகத்தால் மொத்த குடும்பத்தையும் கொலை செய்து அதிர்ச்சியைக் கிளம்பியுள்ளார்.

jolly

அதன்படி  நகைப்பட்டறையில் பணிபுரியும் தனது நண்பரிடமிருந்து  சயனைடு வாங்கியுள்ளார். ஜோலி  குடும்பத்தில் உள்ளவர்கள் இரவு உணவுக்குப்பின் சூப் சாப்பிடுவது வழக்கம். அதைப் பயன்படுத்தி முதலில் மாமியார் அன்னம்மாவுக்கு 2002ஆம் ஆண்டு மட்டன் சூப்பில் சயனைடை கலந்து கொடுத்துள்ளார்.  இதன் முறையே  2008ஆம் ஆண்டு மாமனார் டாம் தாமஸையும் 2011ஆம் ஆண்டு கணவர் ராய் தாமஸையும் கொலை செய்துள்ளார். ஜோலியின் நடவடிக்கையில் சந்தேகம் பட்ட அன்னம்மாவின் சகோதரர் மேத்யூவையும் இதே பாணியில் தீர்த்து கட்டியுள்ளார் . இதன்பின்னர் இறுதியாக 2016ஆம் ஆண்டு காதலன் சாஜுவின் மனைவி மற்றும் 10 மாத பெண் குழந்தைக்கும் மட்டன் சூப் கொடுத்து கொலை செய்துள்ளார்.

jolly

திருமணத்திற்குத் தடையாக இருந்த மொத்த குடும்பத்தையும் தீர்த்து கட்டிவிட்ட நிம்மதியில் ஜோலி   மற்றும் சாஜூ 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.  குடும்பத்தில் தொடர் மரணங்கள், மனைவி இறந்து ஒரு வருடத்தில் சாஜு -ஜோலி  திருமணம் செய்து கொண்டது என பல்வேறு சந்தேகங்கள் உறவினர்கள் மத்தியில் எழுந்தது. 

இதையடுத்து வெளிநாட்டிலிருந்த ஜோலியின் முதல் கணவரின் சகோதரர் தனது குடும்பத்தில் ஏற்பட்ட மரணங்கள்  மீது சந்தேகம் இருப்பதாகப் போலீசில் புகார் கொடுக்க, ஜோலியின் உறவினர்களும் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் கல்லறைகளைத் தோண்டி எடுத்த போலீசார், அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததில் அவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.  இதையடுத்து ஜோலி, அவரது 2வது கணவர் சாஜு, நகைப்பட்டறை ஊழியரை பிடித்து போலீசார் விசாரணையைத் தொடர்ந்தனர்.  அதில் 6 பேரையும் கொன்றதை ஜோலி  ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.  ஜோலி  வெவ்வேறு இடங்களிலிருந்து சயனைடுகளை வாங்கியதாகவும் தெரிகிறது.  மேலும்  பலமுறை கருக்கலைப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளதால் அவர் பல ஆண்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் போலீசார் ஜோலியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

jolly

இந்நிலையில்  ஜோலியை போலீசார்   மருத்துவ பரிசோதனைக்காக கொயிலாண்டி தாலுகா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தனது இச்சைக்காக மொத்த குடும்பத்தையும் கொலை செய்த ஜோலியை காண அங்கு ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தின் முன்பு கூடியிருந்தனர் . அப்போது ஜோலியின் முகம் மூடப்பட்டிருந்தது.  அப்போது திடீரென்று  இளைஞர்  ஒருவர் ஜோலியின் முகத்திலிருந்த துணியை பிடித்து இழுத்து விலக்கினார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. 

விசாரணையில் அந்த இளைஞர் கன்னஞ்சேரியை சேர்ந்த சாஜூ என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சாஜுவை கைது செய்தனர்.