கேரளாவில் மேலும் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

 

கேரளாவில் மேலும் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 1,67,442ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 71,406 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,797ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலமான கேரளா, சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் பிற மாநிலங்களைவிட தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வந்தது. இந்நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

கேரளாவில் மேலும் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் வெள்ளிக்கிழமையான இன்று மேலும் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 33 பேர் வெளிநாடுகளில் இருந்தும், தமிழகம் 10, மகாராஷ்டிரா 10 என 23 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 6 பேருக்கு நோயாளிகளின் தொடர்புகளால் நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. 10 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து கேரளாவில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் உள்ளவர் எண்ணிக்கை 526 ல் இருந்து 577 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 1150 பேர் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எட்டு பேராக அதிகரித்துள்ளது, 565 பேர் குணமடைந்துள்ளனர்” என தெரிவித்தார்.