கேரளாவில் மீண்டும் உச்சம்! ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று!!

 

கேரளாவில் மீண்டும் உச்சம்! ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று!!

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன்,  “மார்ச் 12ம் தேதிக்கும் ஏப்ரல் 22க்கும் இடையில் வெளிநாடுகளில் இருந்து கேரளாவிற்குள் வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளில் இருந்தவர்கள் அனைவரின் ரத்த மாதிரிகள் சேகரித்து பரிசோதனை செய்ய முடிவு செய்யப்படுள்ளது

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன்,  “மார்ச் 12ம் தேதிக்கும் ஏப்ரல் 22க்கும் இடையில் வெளிநாடுகளில் இருந்து கேரளாவிற்குள் வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளில் இருந்தவர்கள் அனைவரின் ரத்த மாதிரிகள் சேகரித்து பரிசோதனை செய்ய முடிவு செய்யப்படுள்ளது. செவ்வாய்கிழமை கண்ணூர் 10, பாலக்காடு 4, காஅசர்கோடு 3, மலப்புரம், கொல்லம் தலா ஒருவர் என 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து குணமடைந்து இன்று மட்டும் 16 பேர் வீடு திரும்பியுள்ளனர். காசர்கோட்டில் 19 பேரும், அலப்புழா 2 பேர் என குணமடைந்துள்ளனர்.

இதையடுத்து கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர் 426 பேர். இன்று கொரோனா வைரஸால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 307 பேர். தற்போது மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 114 லிருந்து 117 ஆக அதிகரித்துள்ளது. இதில் கண்ணூரில் மட்டும் 53 பேர் அடங்குவர். மாநிலத்திலேயே அதிக கொரோனா பாதிப்பு கண்ணூரில் என்பதால் அங்கு ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

coronavirus

இதுவரை மாநிலம் முழுக்க 36,667 பேர் மருத்துவக்கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 36,335 பேர் வீடுகளிலும் 332 பேர்  மருத்துவமனைகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை நோய் அறிகுறிகள் உள்ள 20,252 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை மேற்கொண்டதில் 19,442 பேரின் முடிவுகள் “நெக்கடிவ்” ஆக வந்துள்ளது. இன்று கண்ணூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 பேரில் ஒன்பது பேர் பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். ஒருவர், இவர்களின் தொடர்பில் இருந்தவர். தவிர பாலக்காடு, மலப்புரம், கொல்லம் ஆகிய மூன்று மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்களில் தலா ஒருவர் தமிழகத்தில் இருந்து வந்தவர்கள். மற்றவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். இதனால் தான் தமிழக கேரள எல்லைகளில் கண்காணிப்பும், சோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.