கேரளாவில் படிப்படியாக குறையும் கொரோனா! இன்று 4 பேருக்கு கொரோனா

 

கேரளாவில் படிப்படியாக குறையும் கொரோனா! இன்று 4 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரத்தில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, “கேரளாவில் சனிக்கிழமை கண்ணூர் மாவட்டத்தில் மூவர், கோழிக்கோட்டு மாவட்டத்தில் ஒருவர் என நால்வருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று இருவர் மட்டுமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

திருவனந்தபுரத்தில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, “கேரளாவில் சனிக்கிழமை கண்ணூர் மாவட்டத்தில் மூவர், கோழிக்கோட்டு மாவட்டத்தில் ஒருவர் என நால்வருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று இருவர் மட்டுமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர் 399 பேர். இதில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 257 பேர். தற்போது மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 138 லிருந்து 140 ஆகியுள்ளது.

coronavius

இதுவரை மாநிலம் முழுக்க 67,190 பேர் மருத்துவக்கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 66,686 பேர் வீடுகளிலும் 504 பேர்  மருத்துவமனைகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை நோய் அறிகுறிகள் உள்ள 18,744 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை மேற்கொண்டதில் 17,763 பேரின் முடிவுகள் “நெக்கடிவ்” ஆக வந்துள்ளது” எனக்கூறினார்.