கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட துணை ஆட்சியர் கான்பூருக்கு தப்பி சென்றதால் பரபரப்பு

 

கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட துணை ஆட்சியர் கான்பூருக்கு தப்பி சென்றதால் பரபரப்பு

கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட துணை ஆட்சியர் கான்பூருக்கு தப்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொல்லம்: கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட துணை ஆட்சியர் கான்பூருக்கு தப்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், அண்மையில் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பிய கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட துணை ஆட்சியர் அனுபம் மிஷ்ரா தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார்.

ttn

ஆனால் அரசின் உத்தரவுக்கு கட்டுப்படாத அவர் அவருடைய வீட்டிலிருந்து தப்பித்து கான்பூரில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு சென்று விட்டார். செல்போன் மூலம் அவர் கான்பூரில் பதுங்கி இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் மார்ச் 23-ஆம் தேதி இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே கான்பூருக்கு வந்து விட்டதாக அனுபம் மிஷ்ரா கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்காத போலீசார் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கூடிய விரைவில் அனுபம் மிஷ்ரா கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.