கேரளாவில் கொட்டும் கனமழை..! மோடியிடம் உதவிக்கேட்ட ராகுல்!!

கேரளாவில் கொட்டும் கனமழை..! மோடியிடம் உதவிக்கேட்ட ராகுல்!!

கேரளாவில் தொடர்ந்து கனமழை கொட்டி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொச்சி விமான நிலையிம் வரும் 11ஆம் தேதி வரை மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களாக இடைவெளியின்றி பெய்யும் மழையால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. தேயிலைத் தோட்டங்கள் வழியே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வயநாட்டில் மேப்பாடி, புதுமலை பகுதிகளில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. கல்பேட்டா பகுதியில் ஒரு வீடு இடிந்து விழும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இதுவரை மழை வெள்ளத்தால் 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு தொடர்ந்து ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வயநாட்டின் பல்‌‌வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கொச்சி விமான நிலையத்தில் மழை நீர் சூழ‌ந்துள்ளதால் நாளை மறுதினம் பிற்பகல் மூன்று மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்தால் பயணிகள் கடுமையாக அவதிப்படுள்ளனர். இதுவரை 22 ஆயிரத்து 165 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாநிலம் முழுவதிலும் 300க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில பேரிடர் மீட்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கேரள மாநிலம் வயநாட்டில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என அத்தொகுதி எம்பி ராகுல்காந்தி , பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.