கேரளாவில் ஏப்ரல் 20-க்கு பிறகு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்வு ! 

 

கேரளாவில் ஏப்ரல் 20-க்கு பிறகு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்வு ! 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சரியான திட்டமிடல் காரணமாக கொரோனா தொற்று வெகுவாக  குறைத்துள்ளது.

இந்தியாவிலேயே  கொரோனா பாதிப்பு முதலில் கண்டறியபட்ட மாநிலம் என்றால் அது கேரளா. ஆரம்பத்தில்  கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த கேரளாவில் நாளுக்கு நாள் நிலைமை கட்டுக்குள் கொண்டு  வரப்பட்டது. 

tt

இந்தியாவை பொறுத்தவரையில் 11,467 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 448 பேர் இறந்துள்ள நிலையில் 1515 பேர் குணமாகி உள்ளனர்.  கேரளாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சரியான திட்டமிடல் காரணமாக கொரோனா தொற்று வெகுவாக  குறைத்துள்ளது.

tt

இந்நிலையில் கேரளாவில் ஏப்ரல் 20-க்கு பிறகு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்வு  செய்யப்படும் என்றும் மாவட்டங்களில் ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனங்கள் அனுமதிக்கப்படும். அதே சமயம் பெண்கள் வாகனம் ஓட்டி வந்தால் இதில் சலுகைகள் வழங்கப்படும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.