கேரளாவில் இரண்டு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி! காணக் குவிந்த மக்கள் கூட்டம்

 

கேரளாவில் இரண்டு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி! காணக் குவிந்த மக்கள் கூட்டம்

கடந்த வாரம், ஒரு விவசாயியின் மாடு இணைந்த தலைகளுடன் ஒரு கன்றை ஈன்றது. சுவாரஸ்யமாக, கன்றுக்குட்டிக்கு தலையில் நான்கு கண்கள், இரண்டு வாய்கள் மற்றும் ஒரு ஜோடி காதுகள் உள்ளன.

 

கேரளாவில் இரண்டு முகங்களுடன் கன்று பிறந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த வாரம், ஒரு விவசாயியின் மாடு இணைந்த தலைகளுடன் ஒரு கன்றை ஈன்றது. சுவாரஸ்யமாக, கன்றுக்குட்டிக்கு தலையில் நான்கு கண்கள், இரண்டு வாய்கள் மற்றும் ஒரு ஜோடி காதுகள் உள்ளன.

இந்த அதிசய கன்றுக்குட்டியைப் பார்க்க கிராமம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். பிறப்பு குறைபாடோடு பிறந்த இந்த கன்றுக்கு இரண்டு நாக்குகள் உள்ளன, அதன் காரணமாக, அதால் இயற்கையாகவே பால் குடிக்க முடியவில்லை, எனவே விவசாயி ஒவ்வொரு நாளும் ஒரு பாட்டிலில் அதற்கு பால் கொடுக்க வேண்டியிருக்கிறது.

calf-with-two-head-01

கன்றுக்குட்டிக்கு ஏற்பட்ட  இந்த நோய்க்கு டைஸ்ஃபாலிக் பராபகஸ் என்று பெயர். இந்த நோய் லட்சத்தில் ஒரு மாட்டிற்கு மட்டுமே ஏற்படுமாம்.ஆய்வுகளின்படி, டைசெபாலிக் பராபகஸுடன் பிறந்த விலங்குகள் குறைந்த காலம் தான் உயிர்வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவாம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சில மட்டுமே அதிக காலம் வாழ்ந்துள்ளதாக அறியப்படுகிறது. இருப்பினும், தற்போது, மாடு மற்றும் கன்று இரண்டும்ஆரோக்கியமாக உள்ளன. முரண்பாடுகளை மீறி இது வாழ்ந்து காட்டும் என நம்புவோம்.